மெட்ரோ ரயில் நிலையத்தில் மகனை காதலியுடன் பார்த்த தாய்… அங்கேயே உடனடி நிச்சயதார்த்தம்... வைரல் வீடியோ!

 
மெட்ரோ
 

மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அமர்ந்திருந்த மகனை பார்த்த தாய், அங்கேயே அந்த பெண்ணுடன் திருமண நிச்சயத்தை செய்து வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவருடன் வெளியே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களுடன் வந்தபோது, மகன் பெண்ணுடன் இருப்பதை கண்டு தாய் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மகனை கண்டித்த தாய், வாங்கி வந்த பழங்கள் மற்றும் பூக்களை பெண்ணிடம் கொடுத்து, இருவருக்கும் இனிப்பு ஊட்டி பாரம்பரிய முறையில் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அறிவித்து ஆசீர்வதித்தார். தந்தையும் இருவரையும் வாழ்த்தினார். இந்த சம்பவத்தை அங்கு இருந்தவரிடம் வீடியோ எடுக்குமாறு தாய் கூறியதும் அதில் பதிவாகியுள்ளது.

வீடியோவின் இறுதியில் மகனும் காதலியும் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரும் ஆதரவு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில், இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ போல உள்ளது என்றும் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!