அழகிற்காக 4 குழந்தைகளை கொன்ற தாய்... கொடூரமாக மாறிய பொறாமை!
தன்னை விட அழகாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் 4 குழந்தைகளை கொலை செய்த பெண்ணை ஹரியானா போலீசார் கைது செய்தனர். நல்தா மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது 6 வயது சிறுமி மாயமானார். தேடுதலில், வீட்டின் முதல் மாடியில் இருந்த தண்ணீர் டிரம்மில் தலைகீழாக மிதந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சிறுமியின் உறவினரான பூனம் (32) கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திடுக்கிடும் உண்மைகளை ஒப்புக்கொண்டார். 2023ஆம் ஆண்டில் தனது சொந்த மகன் மற்றும் ஒரு சிறுமியை கொலை செய்ததாக கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் இன்னொரு உறவுக்கார சிறுமியும் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட குழந்தைகள் அனைவரும் அழகாக இருந்ததாக பூனம் கூறினார். அவர்கள் பெரியவர்களாகும்போது தன்னை விட அழகாகிவிடுவார்கள் என்ற பொறாமையே காரணம் என்றார். கல்வி அறிவு இல்லாத அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். முன்பு நடந்த கொலை வழக்குகள் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
