21 மாதங்களில் 247 குழந்தைகள் உயிரிழப்பு !! மகப்பேறு மருத்துவமனையில் மர்மம்?!

 
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இயங்கி வரும் அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில், நாள்தோறும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு மருத்தவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளள. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்துக்கு உட்பட்ட ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2021 ஏப்.1ஆம் தேதி முதல் 2023 ஜன.15ஆம் தேதி வரை எத்தனைக் குழந்தைகள் இறந்துள்ளன என்பது குறித்து புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார்.

ராணியார்

அதில், மூச்சுத்திணறலால் 56 குழந்தைகள், குறைபிரசவத்தில் 7 குழந்தைகள், மிகக் குறைவான எடையுடன் பிறந்த (1 கிலோவுக்கும் குறைவாக) 47 குழந்தைகள், கிருமித் தொற்றால் 35 குழந்தைகள், பிறக்கும்போதே ஏற்படும் மூச்சுத்திணறலால் 69 குழந்தைகள், பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்த 24 குழந்தைகள் என 247 குழந்தைகள் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி கூறியதாவது, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தாய், சேய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. இங்கு 21 மாதங்களில் குழந்தைகள் இறப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டது. அதில், என்னென்ன பாதிப்புகளால் எத்தனை குழந்தைகள் இறந்தது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட்டு கொடுத்திருந்தோம்.

கர்ப்பிணி

மேலும், வளர்ச்சி குறைபாடுகளுடன் பிறந்த பல குழந்தைகள் மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளன. எனினும், சில நேரங்களில் குழந்தைகள் இறக்கின்றன. பெரும்பாலும் 25 சதவீதம் குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் இருந்துதான் இம்மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 
 

From around the web