தாய் இறந்த சோகம்... வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

 
சேலையில் தூக்கிட்டு தற்கொலை சேலையில் தூக்கிட்டு தற்கொலை


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தாயார் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் கிராமத்தை சேர்ந்த சாமுவேல் மகன் டேவிட் பிரபு (31). சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை சாமுவேல் கோவையில் வியாபாரம் செய்து வருகிறார். அவரது தங்கை திருமணம் ஆகி கோவையில் கணவருடன் வசித்து வருகிறார். 

தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில், டேவிட் பிரபு தாயார் கடந்த 12 நாட்களுக்கு முன்பு இறந்து போனார். அதனால் விரக்தி அடைந்த இவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து அவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

அவரது வீட்டில் தனியாக இருந்த அவர், தாயார் இறப்பை மறக்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

வெறும் ரூ6000/- க்காக  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி!

அங்கு டேவிட் பிரபு தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். அவரது உடல் அழுகி இருந்துள்ளது. அவர் 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை சாமுவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது