செல்போன் பார்ப்பதைக் கண்டித்த தாய்... 10ம் வகுப்பு மாணவி தற்கொலை!
தர்மபுரி மாவட்டம் பச்சனம்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி தாமோதரனின் மகள் பிரதீபா (15). இவர் கடகத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதீபா தனது தாயின் செல்போனை வாங்கி அதில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது தாய், "பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் படிக்காமல் ஏன் எப்போதும் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கண்டித்துள்ளார்.

தாயின் பேச்சால் ஆத்திரமடைந்த பிரதீபா, "நான் படிக்கப் போகிறேன்" என்று கோபமாகச் சொல்லிவிட்டு வீட்டு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பிரதீபா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்கள், உயிருக்குப்போராடிய பிரதீபாவை மீட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாட்டைக் கண்டித்ததற்காக ஒரு சிறுமி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
