மாஸ் வீடியோ... 7 நண்பர்கள், 550 கி.மீ… 2 நாட்கள்..மகா கும்பமேளாவிற்காக மோட்டார் படகில் பயணம் !

உத்திரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 50கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கூட்ட நெரிசல், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து தடை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
सड़कें जाम थीं, ट्रेनें फुल थीं। ऐसे में बिहार के 7 नौजवान मोटरबोट से गंगा के रास्ते प्रयागराज महाकुंभ पहुंच गए। संगम में डुबकी लगाई। 550 KM की बक्सर टू प्रयागराज की ये जर्नी 84 घंटे में पूरी हुई।
— Sachin Gupta (@SachinGuptaUP) February 16, 2025
Full Report : https://t.co/KtVeykmukZ pic.twitter.com/d1SXnnD0n5
இருப்பினும் பக்தர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் உறுதியுடன் உள்ளனர். பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் பிரயாக்ராஜில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். அத்துடன் 300 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் புஹாரின் புஸார் பகுதியில் இருந்து 7 நண்பர்கள் மகா கும்பமேளா நிகழ்வுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பேருந்து மற்றும் ரயில்களில் இடமில்லாததால், அவர்கள் 7 பேரும் மோட்டார் படகில் பயணிக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி பிப்ரவரி 11ம் தேதி காலை 10 மணி அளவில் புஸாரில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர்கள், காசிப்பூர் மற்றும் வரணாசி வழியாக பிப்ரவரி 12ம் தேதி பிரயாக்ராஜ் சென்றடைந்தனர். இவர்கள் மொத்தம் 550 கி.மீ பயணம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!