வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!! இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு!!

 
சுங்கச்சாவடி

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அவற்றின் பராமரிப்பு பணிக்காக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 29 சுங்கச்சாவடிகளில்  இன்று நள்ளிரவு 12 மணி முதல்  சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், சுங்க கட்டண உயர்வால் காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி

தமிழகத்தில் மொத்தம்  உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு உடனடி அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால்  தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சுங்கக்கட்டணம் உயர்வு ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காருக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105 லிருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.2025 லிருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 29 டோல்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு ரூ.5 முதல் ரூ.55 வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுங்கசாவடி டோல்கேட்
தற்போது அமல்படுத்தப்பட உள்ள இந்த கட்டண உயர்வு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 55 டோல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ல் கட்டணம் மாற்றி நிர்ணயம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web