வாகன ஓட்டிகள் கடும் அவதி... ராட்சத மரம் முறிந்து வாகனம் மேல் விழுந்து விபத்து!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை செய்து வருகிறது.
இந்நிலையில் குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கோடேரி கிராமம் அருகே பிக்கப் வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பலத்த காற்றின் காரணமாக சாலை அருகே இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து பிக்கப் வாகத்தின் மீது முறிந்து விழுந்தது. இந்த வாகத்தை ஓட்டி வந்த விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது மரத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குன்னூர் - மஞ்சூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!