திடீரென மொட்டையடித்து கொண்ட தனுஷ்! மகன்களுடன் திருப்பதியில் தரிசனம்!

 
தனுஷ்

நடிகர் தனுஷ் சில காலமாக ஹாலிவுட்டுக்கு நடிக்க சென்று விட்டார். தற்போது தமிழில் சாணிக்காயிதம், ராக்கி  படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.   கடந்த சில நாட்களுக்கு முன் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பர்ஸ்ட்லுக் வெளியான ஒரே நாளில்   ட்விட்டர் பக்கத்தில் 100k லைக்குகளை குவித்து  சாதனை படைத்தது.  

தனுஷ்

இன்று திருப்பதிக்கு சென்று மகன்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.   சாமி தரிசனம் செய்த பின்னர் வெளியே வந்த தனுஷை அவரது ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.  கேப்டன் மில்லர் படத்திற்காக தாடியும் மீசையுமாக இருந்த  தனுஷ், திருப்பதி  கோயிலில் மொட்டை அடித்துள்ளார். மொட்டை அடித்து தலையில் தொப்பியையும் பெரிய ருத்ராட்ச மாலையும் அணிந்துள்ளார்.  

 

“ இது எந்த படத்திற்கான லுக்காக இருக்கும்” ,  “ புஷ்பாவில் வரும் ஃபஹத் ஃபாசில் போல் உள்ளார்”  “தனது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக இப்படி செய்துள்ளார்” என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்துள்ளனர்.  கேப்டன் மில்லரை தொடர்ந்து   தனுஷ், சேகர் கம்முலாவுடன் இணைந்து நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ், மலையாளம், தெலுங்கு என 3  மொழிகளில் வெளியாக உள்ளது.   சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவரது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இவரை பாலிவுட் சினிமாவில் அறிமுகம் செய்த ராஞ்சனா இயக்குநர் ஆனந்த எல்.ராயுடன் மீண்டும் இணைந்து நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தனுஷ்

கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் தாடி மீசையோடு இதுவரை எந்த ஒரு படத்திலும் தோன்றாத வேடத்தில் நடித்து வந்த நிலையில், தன்னுடைய காட்சிகள் முடிவடைந்த உடன் திருப்பதி கோவிலுக்கு பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா - லிங்காவுடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார். இது குறித்த  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.  தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான, திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி  2 படங்களுமே வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web