காதலி இறந்த அதிர்ச்சியில் காதலனும் தற்கொலை செய்துக் கொண்ட சோகம்!
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் காதலர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராம மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.
நாகாச்சி பகுதியைச் சேர்ந்த சசிகலாவும், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால் சசிகலாவின் தந்தை கண்ணன் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது உறவினர் முருகனுக்குச் சசிகலாவைத் திருமணம் செய்து வைத்தார். இந்தத் தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்குப் பிறகும் பாண்டி மற்றும் சசிகலாவின் காதல் செல்போன் வழியாகத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் சசிகலாவின் கணவர் சென்னை சென்றிருந்த போது, சசிகலா பாண்டியுடன் ஊரை விட்டு வெளியேறினார்.
இது குறித்து தந்தையின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் இருவரையும் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சசிகலா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சசிகலா தனது தந்தை வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த உச்சிப்புளி போலீசார், சசிகலாவின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

டிரைவராக வேலைப் பார்த்து வரும் பாண்டி, வேலை நிமித்தமாகத் தர்மபுரி மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்குச் சசிகலாவின் மரணச் செய்தி எட்டியுள்ளது. காதலி பிரிந்த துக்கம் தாளாமல், பாண்டியும் அவர் இருந்த இடத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது சசிகலாவின் உடல் ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையிலும், பாண்டியின் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
