எரிமலை வெடிப்பு... கண்ணாடி துகளுடன் நகரும் சாம்பல் மேகங்கள்... விமான சேவை பாதிப்பு!
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின் மீண்டும் வெடித்துச் சிதறி, அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்கு வான்வெளி வரை பரவியுள்ளன. சாம்பலில் கலந்துள்ள சல்ஃபர் டைஆக்சைடு, சிறிய கண்ணாடித் துகள்கள் மற்றும் பாறைத் துகள்கள் 15,000 முதல் 45,000 அடி உயரத்தில் மணிக்கு 100–120 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் தில்லி வான்வெளிகளில் சாம்பல் மேகங்கள் தடம் பதித்துள்ள நிலையில், விமான நிலையங்களுக்கும், விமானிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அவசர வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. ஓடுபாதைகளில் சாம்பல் துகள்கள் இருப்பதைச் சரிபார்க்கவும், என்ஜினில் சிக்கல் உணரப்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா வழித்தடங்கள் பாதிக்கப்பட்டதால், ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், கேஎல்எம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களின் அட்டவணைகளை மாற்றியமைத்துள்ளன. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; சிலவை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. சூழ்நிலை சரியாகும் வரை விமான சேவை எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
