திருச்செந்தூர் கோவிலில் எம்.பி., ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம்!

 
திருச்செந்தூர் கோவிலில் எம்.பி., ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம் செய்தார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏராளமான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடலில் நீராடினர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி மான ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். 

திருச்செந்தூர் முருகன்

அவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லக்கனி விருந்தினர் மாளிகைக்கு சென்ற நிலையில், அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், நகர செயலாளர் வாள் ஆர் சுடலை, நிர்வாகிகள் கேடிசி முருகன், தோப்பூர் சுரேஷ், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web