எம்பி கார் டிரக் மீது பயங்கர விபத்து.!! . திடீர் பதற்றம், பரபரப்பு !!

 
ஐஸ்வர்யா சர்மா

ஹரியாணா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள தூதிவாலா கிஷன்புரா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கார்த்திகேய ஷர்மா எம்.பி. காரில் குருகிராமுக்கு திரும்பினார். சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் போது, இவரது கார் பின்னால் வந்த டிரக் கார் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் கார்த்திகேய சர்மா அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கார்த்திகேய சர்மாவை மீட்டு மேதாந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சேதமடைந்த காரை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஹரியாணாவில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஐஸ்வர்யா சர்மா

 ராஜ்யசபா எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான வேனோத் சர்மாவின் மகனுமான கார்த்திகேய சர்மா, 2007 முதல் ஐ டி.வி (iTV) நெட்வொர்க்கை நிறுவி அதன் மூலம் பல்வேறு செய்தி சேனல்களை நடத்தி வருகிறார்.

தொழிலதிபர் மற்றும் ஊடக உரிமையாளரான கார்த்திகேய ஷர்மா கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் இருந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். பாஜக மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) ஆளும் கூட்டணியின் ஆதரவுடன், காங்கிரஸின் மூத்த தலைவரான அஜய் மக்கனை தோற்கடித்து மேல்-சபைக்கு தேர்வானார்.

ஐ டி.வி நெட்வொர்க் நியூஸ்எக்ஸ் (NewsX) என்ற ஆங்கில செய்தி சேனலை நிர்வகிக்கிறது. அதன் பிராந்திய பிரிவுகளான இந்தியா நியூஸ் ஹரியானா, இந்தியா நியூஸ் மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர், இந்தியா நியூஸ் பஞ்சாப் மற்றும் இந்தியா நியூஸ் உத்தரப் பிரதேசம்-உத்தரகாண்ட் ஆகியவை இந்தி பேசும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நெட்வொர்க்கிற்கு மூன்று தேசிய செய்தி சேனல்கள், இரண்டு செய்தித்தாள்கள், ஐந்து பிராந்திய செய்தி சேனல்கள் மற்றும் மொத்தம் இரண்டு ஆன்லைன் போர்டல்கள் (இணையதள செய்தி பிரிவு) உள்ளன. இந்த நிறுவங்களின் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஐஸ்வர்யா சர்மா

குர்கான், டெல்லி, சண்டிகர் மற்றும் பஞ்சாபில் உள்ள பல ஐந்து நட்சத்திர (ஃபைவ் ஸ்டார்) ஹோட்டல்களிலும் கார்த்திகேயாவுக்கு பங்குகள் உள்ளன.2021ல், அவரது தந்தை ஹரியானா ஜன் சேத்னா கட்சியைத் தொடங்கினார். பாரதிய ஜனதாவில் சேருவதற்கு முன்பு கார்த்திகேயா அதன் உறுப்பினராக இருந்தார். அவர் ஹரியானா மாநில முன்னாள் சபாநாயகர் குல்தீப் சர்மாவின் மகள் ஐஸ்வர்யா சர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web