செம!! மும்பையை மிரள விட்ட சிறுமி சர்வதேச தூதராக நியமனம்!! வைரல் வீடியோ!!

 
மலீஷா கார்வா

மும்பை தாராவி பகுதியில்  கழிப்பறை இல்லாத குடிசை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசித்து வருபவர் மலீசா கார்வா.குஜராத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் வசித்து வரும் கார்வா இன பழங்குடி மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். சிறுமி மலீசா கார்வாவின் குடும்பம் 10 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக மும்பை தாராவியை அடைந்தது. இதில் சிறுமி மலீசா  2020 முதல் பிரபலமானார்.  ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் ராபர்ட் ஹாப்மேன் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் இசை ஆல்பத்துக்காக மும்பை வந்தார்.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் விமான சேவை முற்றிலும் முடங்கியது.  சிறுமி மலீஷாவை, நடிகர் ராபர்ட் ஹாப்மேன் சந்தித்தார். அந்த சிறுமியின் சரளமான ஆங்கில பேச்சு, துணிச்சல், நடன ஆர்வத்தை கண்டு ஹாப்மேன் வியந்தார். சிறுமியின் ஏழ்மையை போக்க முடிவெடுத்தார். ஆன்லைன் மூலம் சிறுமி மலீசாவுக்கு ரூ15லட்சம் நிதி திரட்டிக் கொடுக்க முடிவு செய்தார். அத்துடன்  சிறுமியின் பெயரில் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதள கணக்குகளை தொடங்கி, அவரின் நடன ஆர்வத்தை ஹாப்மேன் ஊக்குவித்தார்.


 2020  முதல் மலீஷா சமூக வலைதளங்களில் சிறுமி பிரபலமடைந்தார்.  இவரை 'குடிசை இளவரசி' என்றே சமூக வலைதளங்களில் டேக் செய்கின்றனர். இவரது வீடியோக்கள் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்தது. தி பீக்காக், காஸ்மோபாலிட்டன் இந்தியா  என பல  முன்னணி இதழ்களில் மலீஷாவின் புகைப்படங்கள் அட்டைப்படமாக பிரசுரிக்கப்பட்டன.இதனை கண்டு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.  சமீபத்தில்  2 ஹாலிவுட் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

மலீஷா கார்வா
தற்போது  டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'பாரஸ்ட் எசென்ஷியல்ஸ்' என்ற முன்னணி அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக மலீஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் மட்டும் மொத்தம் 115 பிரம்மாண்ட ஷோரூம்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 190 பெரிய ஹோட்டல்களுக்கு அந்த நிறுவன தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் 120 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தற்போது  பாரஸ்ட் எசென்ஷியல்ஸின் விளம்பர தூதராக மலீஷா நியமிக்கப்பட்டிருப்பதால்  சூப்பர் மாடலாக உருவெடுத்துள்ளார்.  மும்பையில் உள்ள அந்த நிறுவன ஷோரூமுக்கு மலீஷா சமீபத்தில் மிக எளிமையான உடையில் சென்று பார்வையிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. குடிசைப்பகுதியில் தொடங்கிய மலீஷாவின் கனவு இன்று கோபுரமாக உயர்ந்திருப்பது அங்கு வாழும்  ஏழை, எளிய மக்களுக்கு நம்பிக்கை, உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web