29 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மேயராக பாஜக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு!

 
mumbai
 

 

மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக பாஜகவை சேர்ந்த ரிது தாவ்டேவும், துணை மேயராக சிவசேனா (ஷிண்டே) கட்சியை சேர்ந்த சஞ்சய் காடியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது. இதன் மூலம் மும்பை மாநகராட்சியில் 29 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா அல்லாத கட்சியை சேர்ந்தவர் மேயராக பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 227 இடங்களில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா (ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்றது. மேயரை தேர்வு செய்ய 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி 118 இடங்களில் வெற்றி பெற்றதால் மேயர் பதவி அவர்களுக்கு உறுதியானது. ரிது தாவ்டே ஏற்கனவே பிஎம்சி கல்விக் குழுத் தலைவராக பணியாற்றியவர்.

இதற்கு முன் 1982–83 காலகட்டத்தில் பாஜகவை சேர்ந்த பிரபாகர் பாய் மும்பை மேயராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக பாஜகவுக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் காடி சுழற்சி முறையில் 15 மாதங்கள் பதவி வகிக்க உள்ளார். நாட்டிலேயே பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியான பிஎம்சியின் 2025–26 பட்ஜெட் ரூ.74,450 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!