இன்று இரவு மும்பை–குஜராத் அணிகள் மோதல்!
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் நவிமும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதுவரை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 2-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முன்னேற்றம் காண முடியும் என்பதால், இந்த ஆட்டம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
