மருத்துவ மாணவி கொலை வழக்கு... தலைமறைவாக உள்ள தந்தை குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் அறிவிப்பு!
திருநெல்வேலியைச் சேர்ந்த வர்ஷினி என்ற மாணவி, சேலத்தில் படித்து வந்த நிலையில், அவரது தந்தை வரதராஜனே (51) மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதியாண்டு ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்த வர்ஷினி, திருநெல்வேலியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான சக்திவேல் (42) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குத் தந்தை வரதராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6ம் தேதி, சேலத்தில் வர்ஷினி தங்கியிருந்த அறைக்கே சென்று வரதராஜன் அவரைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை தனது மகளையே கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
கொலை செய்த பிறகு தனது மனைவி மற்றும் தாயிடம் "நான் காசிக்குச் செல்கிறேன்" எனக் கூறிவிட்டு வரதராஜன் தலைமறைவாகியுள்ளார். அவர் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் மொட்டை அடித்துத் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரதராஜனின் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி உருப்படியான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 25,000 சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
