கொலையா? வனக்காப்பாளர் கழிவறை வாசலில் சடலமாக மீட்பு... பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்லப்பன். இவருக்கு வயது 57. இவர் வனத்துறையில் வனக்காப்பாளராக (கார்டர்) வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் ஸ்தலத்தில் உள்ள வன சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார்.
இவர் மார்ச் 2ம் தேதி இரவு குலசேகரம் காவல் ஸ்தலத்தில் உள்ள வன சோதனை சாவடியில் வழக்கம் போல் செல்லப்பன் பணியில் இருந்தார். நேற்று காலையில் மாற்று வனக்காப்பாளர் சுஜின் என்பவர் பணிக்கு வந்த போது சோதனை சாவடியில் செல்லப்பனை காணவில்லை. இதையடுத்து அவரை தேடியபோது கழிவறை வாசலில் செல்லப்பன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். மேலும் செல்லப்பன் இறந்தது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவே அவர் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
செல்லப்பன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லப்பன் கழிவறைக்கு சென்று விட்டு அறைக்குள் வரும் போது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செல்லப்பனுக்கு நீலம்மா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!