பட்டியலின இளைஞர் கொலை விவகாரம்… தேசிய பட்டியல் சமூக ஆணையம் விசாரணை!

 
தூத்துக்குடி
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து கொலை வழக்கில் தேசிய பட்டியல் சமூக ஆணையம் களத்தில் இறங்கியது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 27 வயதான சுடலைமுத்து, மதுபான கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

போலீஸ்

இந்த நிலையில், தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் சென்னை மண்டல இயக்குநர் டாக்டர் எஸ்.ரவிவர்மன் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரணத்தைத் தவிர, மாதாந்திர ஓய்வூதியம், வீடு, அரசு வேலைவாய்ப்பு, குடும்பத்திற்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து மறுவாழ்வு உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

தமிழ்நாடு அரசாணை

மேலும் மீதமுள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவும், குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. குறைந்தது மூன்று மாதங்களுக்கு மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியை பார்வையிட்ட அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!