கர்ப்பிணியாக இருந்த கள்ளக்காதலி கொலை..கொடூரத் தொழிலாளிக்குத் தூக்குத் தண்டனை!

 
கொலை

திருமணமாகியும் மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கர்ப்பமாக இருந்த தனது கள்ளக்காதலியைச் சதி செய்து கொலை செய்த வழக்கில், ஆலப்புழை கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரைச் சேர்ந்தவர் பிரபீஷ் (37). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவியும் இருக்கிறார். இந்நிலையில், பிரபீஷ்க்கும் அனிதா (32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் உறவு ஏற்பட்டது. அனிதாவின் கணவர் பிரிந்து சென்ற நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் பாலக்காட்டில் தனியாக வசித்து வந்தார்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

இதையடுத்து பிரபீஷ் அடிக்கடி அனிதாவின் வீட்டுக்குச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அனிதா கர்ப்பமானார். இதனால், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபீஷை அவர் வற்புறுத்தத் தொடங்கினார். ஆனால், பிரபீஷ், அனிதாவை ரகசியமாகத் தவிர்ப்பதற்கு முடிவு செய்தார். அது முடியாததால், அவர் தனது மற்றொரு கள்ளக்காதலியான ரஜனி ( 38) என்பவருடன் சேர்ந்து அனிதாவைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி, பிரபீஷ் அனிதாவை ஆலப்புழையில் உள்ள ரஜனியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து, ரஜனி அனிதாவின் வாயைப் பொத்திக் கொள்ள, பிரபீஷ் அவரது கழுத்தைக் கயிற்றால் இறுக்கினார். இதில் அனிதா மயக்கமடைந்தார்.

கழுத்தை நெரித்து கொலை

அவர் இறந்து விட்டதாக எண்ணிய இருவரும், அனிதாவின் உடலை அருகில் இருந்த ஆற்றில் வீசி விட்டுச் சென்றனர். ஆற்றில் வீசப்பட்ட அனிதா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் பிரபீஷ், ரஜனி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தக் கொலை வழக்கில், பிரதான குற்றவாளியான பிரபீஷ்க்கு ஆலப்புழை கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ரஜனி, தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒடிசா சிறையில் இருப்பதால், அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!