சாமியார் வேடத்தில் ஒளிந்த கொலை குற்றவாளி… 3 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது!
வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்த மனோகர் (35) கடந்த 2022ஆம் ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி 16 பேரை கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியான வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவை சேர்ந்த கிரேட்டன் என்ற ரோசரி கிரேட்டன் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில் சாமியார் வேடம் அணிந்து நாகப்பட்டினம் அருகே மறைந்து இருந்த கிரேட்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
