பகீர்... பாலில் எலி மருந்தை கலந்து கொடுத்து கணவன் கொலை... மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

 
குஜராத்
 

சூரத் லிம்பாயத் பகுதியில் வசித்து வந்த ஹைதர் அலி கடந்த ஜனவரி 5-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் மனைவி இஷ்ரத் ஜஹான் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பிஹாரில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் திட்டமிட்ட நிலையில், சூரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என மனைவி வற்புறுத்தினார். இதனால் சந்தேகம் எழுந்து, ஹைதர் அலியின் சகோதரர் மீண்டும் உடற்கூராய்வு செய்ய கோரிக்கை வைத்தார்.

மறுவிசாரணை உடற்கூராய்வில் ஹைதர் அலி நெஞ்சு நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் இஷ்ரத் ஜஹானிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவர் பாலியல் ஊக்க மருந்துகளை பயன்படுத்தி தன்னை அடிக்கடி துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார். அந்த மன வேதனையால் ஜனவரி 1-ம் தேதி முதல் மஞ்சள் பாலில் எலி மருந்தை கலந்து கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

ஆம்புலன்ஸ்

விஷம் கொடுத்தும் உயிரிழக்காததால், தூங்கிக் கொண்டிருந்த கணவரின் கழுத்தை நெரித்தும் மார்பின் மீது ஏறி நின்றும் கொலை செய்ததாக இஷ்ரத் ஜஹான் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த சம்பவம் தற்போது குடும்பக் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாதாரண மரணமாக கருதப்பட்ட சம்பவம் கொடூரக் கொலையாக மாறியது சூரத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!