இன்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு... குவியும் பக்தர்கள்!

இன்று ஜூன் 22ம் தேதி மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகளை அந்த திடலில் அமைத்துள்ளனர்.
அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகளை காண தினமும் ஏராளமானவர்கள் வந்து சென்ற நிலையில், மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது அதன்படி முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் மதுரை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி, அவர்கள் பதிவு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கலாம் எனவும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் காவல்துறை உரிய ஆணவங்களை பரிசோதித்து கொள்ளாலாம் எனவும் இதற்கு மனுதாரர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!