முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சு… எடப்பாடி நெகிழ்ச்சி!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் புதிய உறுப்பினர்களை கட்சியின் சேர்த்தல் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை கட்சியில் சேர்த்தல் ஆகிய பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழா எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற போது மாற்றுக் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அப்போது அவருக்கு முருகனின் வேல்-ஐ பரிசாக கொடுக்கப்பட்டது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இன்றைய தினத்தில் எனக்கு முருகனின் வேல் பரிசாக வழங்கப்பட்டு என்னுடைய கைகளில் வந்துவிட்டது எனக் கூறினார். அதாவது முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சு என பேசியது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!