"முருகனுக்கு பவர் அதிகம்".. முதல்வரின் கார் டயர் அதனால தான் வெடிச்சுது - செல்லூர் ராஜூ!
காரில் திருப்பரங்குன்றம் அருகே மதுரை நோக்கி 100 கி.மீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலினின் காட்ன் டயர் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அவரை விமர்சனம் செய்ததால்தான், ஒருவேளை அவர் காரின் டயரைப் பஞ்சர் ஆக்கிவிட்டாரோ என்னவோ?" எனத் தனது பாணியில் செல்லூர் ராஜூ கிண்டலாகக் கூறியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி அதிகாரப் பங்கீடு கேட்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "திமுக கூட்டணி வலுவிழந்துவிட்டது. தனித்து நிற்கத் தயாரா என திமுகவிற்குச் சவால் விடுகிறேன். ஸ்டாலின்தான் வர்றாரு" என்ற பாடலைப் போடவே இப்போது திமுகவினர் தர்மசங்கடப்படுகிறார்கள் என விமர்சித்தார்.
இ.பி.எஸ் டெல்லி சென்றது அடிமைத்தனத்திற்காக அல்ல; தமிழகத்தின் நலனுக்காகவும், திமுகவின் ₹4 லட்சம் கோடி ஊழல் புகாரை அமித்ஷாவிடம் ஒப்படைக்கவும்தான் எனத் தெளிவுபடுத்தினார். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு என்றும் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
