மெலடி கிங் அபிஜித் மஜூம்தார் மறைவு… ஒடியா திரையுலகம் சோகம்!
ஓடியா திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அபிஜித் மஜூம்தார் இன்று (ஜன.25) மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 54. இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 57-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்துள்ள அவர், 700-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இனிமையான மெலடி பாடல்களால் ரசிகர்களை கவர்ந்ததால், அவரை ஒடிசா மக்கள் அன்புடன் “மெலடி கிங்” என்று அழைத்தனர்.
அபிஜித் மஜூம்தாரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இசை என்றும் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என பலரும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
