முசிறி காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு! குவியும் பாராட்டுகள்!

 
திருச்சி  முசிறி டிஎஸ்பி யாஸ்மின்

மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களைப் பட்டியலிடுகையில், தமிழகத்தின் முதல் சிறந்த காவல் நிலையமாக முசிறி காவல் நிலையத்தை தேர்ந்தெடுத்து சான்றிதழ் வழங்கியுள்ளது.  சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிகாரிகளும், பொதுமக்களும் பாரட்டி வருகின்றனர். காவல் துறை உங்கள் நண்பன் எனும் வாக்கியத்திற்கேற்ப, பொதுமக்களிடம் இயல்பாக பழகுவதும், காவல் துறையினர் மீது  மதிப்பும், மரியாதையும் வர வேண்டுமே தவிர பயம் இருக்க கூடாது எனும் வாக்கியத்திற்கேற்ப முசிறி காவல் நிலையம் செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

டிஎஸ்பி யாஸ்மின்

திருச்சி மாவட்டம் முசிறியில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு, மற்றும் பதிவான புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை, காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது .

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த முதல் காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் முசிறி காவல் நிலையத்தைத் தேர்வு செய்து சான்றிதழை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பி வைத்திருந்தது.

முசிறி காவல் நிலையம்

விருதுக்கான சான்றிதழை சென்னை சென்று நேரில் பெற்றுக் கொண்ட முசிறி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமணி, காவலர் ஆனந்தராஜ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் சான்றிதழை நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு துறை சங்கர் உடன் இருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டி ஐ ஜி சரவணசுந்தர், எஸ் பி சுர்ஜித்குமார், முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் முசிறி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web