இஸ்லாமியர் அடித்து கொலை.. பசு காவலர்கள் பெயரில் கும்பல் செயலால் கர்நாடகாவில் பரபரப்பு ?

 
பாஜக

கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக போட்டிபோட்டு பிரச்சாரததில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறையாவது வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என பாஜக போராடி வருகிறது. 

கடந்தமுறை தேர்தலின்போதே பாஜக தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கூட்டணியுடன் குமாரசாமி முதலமைச்சராக ஆட்சி செய்துவந்த நிலையில், அக்கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கொள்ளை புறமாக பாஜக ஆட்சி அமைத்ததால், நிறைய விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தது.

ஆட்சி அதிகாரததுக்கு வந்தபிறகும் அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து. 

இந்நிலையில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, அது விஸ்வரூபமெடுத்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் இட்ரிஸ் பாஷா, கால்நடை வியாபாரி ஆவார். நேற்று முன்தினம் அதாவது கடந்த சனிக்கிழமையன்று இவர், மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பசு பாதுகாவலர்கள் கூறி கொள்ளும் நபர்களான புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள், இட்ரிஸ் பாஷா சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

பாஜக

அப்போது, பாஷா, சந்தைக்கு சென்று வருவதாகவும், அங்குதான் மாடுகளை வாங்கி வருவதாகவும் கூறி, கால்நடை சந்தையில் இருந்து பெற்ற ஆவணங்களையும் அவர்களிடம் காண்பித்ததாக தெரிகிறது. ஆனால், புனீத் கேரேஹள்ளி நபர்களோ, பாஷாவின்அவர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு பாஷா மறுப்பு தெரிவித்ததால் அந்த பசு காவலர்கள் கும்பல் தாக்குதல் நடத்தியது.

அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, புனீத்திடமிருந்து பசு வதை தடை சட்டத்தின்படி புகார் பெற்ற போலீசார் பாஷாவை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அப்போதுதான், கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் பாஷாவின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.. இதையடுத்து, இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்த துவங்கிவிட்டது..

விஷயத்தை கேள்விப்பட்டதுமே, பாஷாவின் உறவினர்கள் ஆவேசமடைந்து, இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் மேலும் பதற்றம் ஏற்பட்டது. பாஷவின் மர்ம மரணத்திற்கு காரணமான பாதுகாவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இதற்கு பிறகு தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாஷாவின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினர். 

பாஜக

ஆனால் முதலில் பாஷா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை போலீசார் கைது செய்தது ஏன்? இதில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது என்ன நடந்தது, பசு பாதுகாவலர்கள் என் கும்பலுக்கு  துணை போகிறதா எனவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இந்த போராட்டத்தின் பின்னர் கேரேஹள்ளி உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், குற்றவாளிகளாக அறியப்படும் புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகி உள்ளனர். சம்பவம் நடந்துள்ள இந்த பகுதியானது, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரின் தொகுதியில் உள்ளதால், பரபரப்பு மேலும் தொற்றியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!