நோன்பு நாட்களில் முஸ்லிம் ஊழியர்கள் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்... தெலுங்கானா அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு!

 
ரம்ஜான் நோன்பு

தெலுங்கானா அரசின் உத்தரவுக்கு இந்துக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முன்னதாக ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில் தெலங்கானாவில் அரசு அலுவலகங்களில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து தெலுங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி முஸ்லிம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கே செல்லலாம் என்று அறிவித்திருந்தது. 

தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்தே முஸ்லிம்களுக்கு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்பலாம் என்ற உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.

ரமலான்

அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா அரசின் இந்த அறிக்கையை அம்மாநில பா.ஜ.க. விமர்சித்து வருகிறது. தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் தந்திரம். நவராத்திரி விரதத்தின் போது இந்துக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி வருகிறது.

ரமலான்

இது குறித்து பாஜகவின் தெலங்கானா ஐடி பிரிவு தலைவர் அமிட் மால்வியா கூறுகையில், “தசரா பண்டிகை உள்ளிட்ட பல இந்து பண்டிகைகளுக்கும் இதே போன்று சிறப்பு அனுமதி வழங்கிட வேண்டும். இதே நிலை நீடித்தால் அது ஒரு தவறான உதாரணத்தை பிற்காலத்தில் கொடுத்து விடும். ஆதலால், இந்த அரசாணையை உடனடியாக தெலங்கானா அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் இதர மதத்தவரின் முக்கிய பண்டிகைகளுக்கும் இதேபோல் ஒரு மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கிட வேண்டும் ” என கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web