நெகிழ்ச்சி... காசி விஸ்வநாதருக்கு இஸ்லாமியர் குடும்பம் செய்யும் மரியாதை.. 250 ஆண்டு கால பாரம்பரியம்!

 
வாரணாசி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கைக் கரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருத்தலம் காசி விஸ்வநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குமி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி நாளில் சிவபெருமானுக்கு அக்பர் தலைப்பாகை அணிவிக்கப்படுகிறது. இது வழக்கமான ஒன்றாக கடைபிடிக்கப்படுகிறது.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றை இந்த ஏகாதசி நாளில் கொண்டாடுகிறார்கள். சிறப்பு வாய்ந்த அந்த நன்னாளில் காசி விஸ்வநாதரும் பார்வதியும், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பீடத்துடன் வீற்றிருப்பார்கள். இந்த ஆண்டு அந்தப் பீடம் காஷ்மீரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.

வாரணாசி

ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த ஏகாதசி திருநாளும் வந்ததால் வாரணாசியில் உள்ளூர் மக்கள் இதனை விமரிசையாகக் கொண்டாடினர். சுமார் 250 ஆண்டுகளாக சிவபெருமானுக்கு தலைப்பாகை தயாரித்து வழங்கும் பணியை கியாசுதீனின் குடும்பம் தான் செய்துவருகிறது. பல தலைமுறைகளாக அவர்கள் அக்பர் தலைப்பாகை செய்யும் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கியுள்ளார்.

இந்த நிலையில், காசி விஸ்வநாதருக்கு தலைப்பாகை செய்வது பொறுப்புடன் செய்யவேண்டியது; மரியாதைக்குரிய விஷயமும்கூட. முன்னோர்களால் தொடங்கப்பட்டதை தொடர்ந்து பின்பற்றி வருவது என் பாக்கியம், என கியாசுதீன் கூறுகிறார். மேலும், ஒரு சேவையாகவே இதைச் செய்கிறோம். லாபம் ஈட்டுவதற்காக அல்ல. இதன் மூலம் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தெய்வத்தின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதாகக் கருதுகிறோம், என்றார்.

வாரணாசி

சிவபெருமானுக்கு அழகிய கலை வேலைப்பாடுகளுடன் அக்பர் தலைப்பாகையை உருவாக்குவது போல, பகவான் கிருஷ்ணருக்கும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தலைப்பாகை தயாரித்துக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது அணிவதற்கான அழகான தலைப்பாகைகளையும் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

 ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web