இஸ்லாமிய பெண் கோவிலுக்கு சென்றதால் காதை கிழித்து துன்புறுத்தல்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த ஷாகிரா (32) மீது அவள் சொந்த தாய், அண்ணன், அண்ணி இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறை தொடர்ந்து திருமணமான ஷாகிரா மற்றும் கணவர் பாரூக், அண்ணன் அமீரின் அனுமதியோடு மட்டுமே வெளியே செல்ல வேண்டிய நிலை நீண்டகாலமாக இருந்து வந்தது. இதனால் அமீர்–பாரூக் இடையே இடையிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமாவாசை நாளன்று ஷாகிரா தனது தோழிகளுடன் கோவிலுக்கு சென்றது குடும்பத்தினரிடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அறிந்த தாய் சூர்யா, அண்ணன் அமீர், அண்ணி சபூரா ஆகியோர் சேர்ந்து பாரூக்கை தாக்கியதோடு, ஷாகிராவை அழைத்து சென்ற தோழி வேண்டாமணி மீது கூட சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்ட ஷாகிராவும் தாக்கப்பட்டதுடன், அணிந்திருந்த செயின், கம்மல் உள்ளிட்ட நகைகள் பறிக்கப்பட்டன. காதில் இருந்த கம்மலை பிடித்து இழுக்கும் போது காதில் தீவிர காயம் ஏற்பட்டதாகவும், கிழிந்த சதையை தாய் மறைத்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்த ஷாகிரா காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோதும் “மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்குங்கள்” என போலீசார் அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தாய், அண்ணன், அண்ணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பறிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
