என் குப்பை, என் பொறுப்பு... தரம் பிரித்து குப்பை வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

 
குப்பை குப்பை
 

 

திமிரி பேரூராட்சியில் ‘என் குப்பை, என் பொறுப்பு’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று செயல் அலுவலர் சரவணன் அறிவுறுத்தினார்.

பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பகுதிகளில், தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையில், செயல் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு குப்பை பிரிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குப்பை

இன்று நடைபெற்ற விழிப்புணர்வில் இளநிலை உதவியாளர் நவீன் குமார், தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்துசாமி மற்றும் பல தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். இதன் மூலம் பொதுமக்கள் குப்பை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை பின்பற்ற ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!