உல்லாசமாக இருந்ததைக் கணவர் பார்த்ததால் விபரீதம்... கொன்று, உடலை எரித்த மனைவி!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகரில், கள்ளக்காதலுடன் உல்லாசம் அனுபவித்ததைக் கணவர் நேரில் பார்த்து கண்டித்ததால், ஆத்திரமடைந்த மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று, பின்னர் அவரது உடலை எரித்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 20ஆம் தேதி, பெங்களூரு புறநகர் மாவட்டம், நெலமங்களா வட்டம், கங்கொண்டனஹள்ளி கிராமத்தில் ஒரு வாலிபரின் உடல் பாதியளவு எரிந்த நிலையில் கிடந்தது. வேறு இடத்தில் வைத்துக் கொன்றுவிட்டு, இங்கே கொண்டு வந்து உடலை எரித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மாதநாயக்கனஹள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதற்கிடையில், பேடரஹள்ளி காவல்துறையினரிடம் பசவராஜ் (28) என்ற கட்டிடத் தொழிலாளி மாயமானதாக அவரது மனைவி சரணம்மா (25) புகார் அளித்திருந்தார். கொலையானது பசவராஜ் தான் என்று அடையாளம் காணப்பட்டது. மேலும், பசவராஜ் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்தே, சரணம்மா காணாமல் போனதாகப் புகார் அளித்திருந்தது காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சரணம்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பசவராஜ், சரணம்மா தம்பதிக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். சரணம்மாவுக்கு, கட்டிட மேஸ்திரியின் மகன் வீரபத்ரா (19) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

சமீபத்தில், வீரபத்ராவுடன் சரணம்மா உல்லாசம் அனுபவிப்பதை கணவர் பசவராஜ் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், அவர் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவரைக் கொலை செய்ய, சரணம்மா மற்றும் வீரபத்ரா ஆகியோர் திட்டமிட்டனர்.
நவம்பர் 19ம் தேதி, மது அருந்தி விட்டுப் படுத்திருந்த பசவராஜின் தலையில் சரணம்மா, வீரபத்ரா ஆகியோர் கல்லைப் போட்டும், கழுத்தைக் கயிற்றால் கட்டித் தூக்கில் தொங்கவிட்டும் கொலை செய்தனர். பின்னர், நண்பர் அனில் (19) என்பவரை வரவழைத்து, பசவராஜின் உடலைக் காரில் எடுத்துச் சென்று, கங்கொண்டன ஹள்ளியில் வைத்து எரித்துள்ளனர்.
இந்தச் கொடூரக் கொலை தொடர்பாகச் சரணம்மா, வீரபத்ரா மற்றும் அனில் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
