சுதந்திர தினத்தில் 6,134 கைதிகள் விடுதலை - மியான்மர் ராணுவத் தலைவர் உத்தரவு!
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற மியான்மர், தனது 78-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டது.
மியான்மரின் தற்போதைய ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் பிறப்பித்த உத்தரவின்படி மொத்த கைதிகள் 6,134 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 52 பேர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உடனடியாக அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர். கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர, மற்ற கைதிகளின் தண்டனைக் காலம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கைதிகள் இந்த விடுதலையில் இடம்பெற்றுள்ளனரா என்பது குறித்த தெளிவான தகவல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெறவில்லை. இது சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பேணவும், மக்களின் மனதை அமைதிப்படுத்தி மனிதாபிமானத்தை மதிக்கும் வகையிலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
