மைசூர் சில்க் புடவை வாங்க அதிகாலை முதலே அலைமோதும் கூட்டம்!

 
mysore mysore

 

கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகம் விற்பனை செய்யும் பட்டுப் புடவைகள் பாரம்பரியமிக்க அடையாளமாகத் திகழ்கின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்தத் தனித்துவமான புடவைகளை வாங்குவதற்குப் பெண்கள் மத்தியில் எப்போதும் அதீத ஆர்வம் காணப்படுகிறது. பெங்களூருவில் உள்ள அரசு விற்பனையகத்தில் கர்நாடகா மட்டுமின்றிப் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் புடவைகளை வாங்கக் குவிந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக நிலவும் கடும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருவருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த டோக்கனைப் பெறுவதற்காகப் பெண்கள் மற்றும் ஆண்கள் முந்தைய நாள் இரவே கடை வாசலில் தவம் கிடக்கின்றனர். தினமும் சுமார் 500 பேர் வரை அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுமார் 6 மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகே அவர்களுக்குப் புடவை வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் தங்களுக்குப் பிடித்தமான பட்டுப் புடவைகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனையகத்திற்குள் செல்லும் வாடிக்கையாளர்களுக்குப் புடவைகளைத் தேர்வு செய்ய வெறும் 10 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு 20,000 ரூபாய் முதல் 5,00,000 ரூபாய் வரையிலான விலையில் பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு புடவை மட்டுமே வழங்கப்படும் என்ற விதியுடன் அதிக நேரம் புடவைகளைப் பார்த்துத் தேர்வு செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அடங்கிய அறிவிப்புப் பலகை விற்பனையகத்தின் முன்பாகவே ஒட்டப்பட்டுப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!