அதிர்ச்சி!! காணாமல் போன பள்ளி மாணவி 9 மாதங்களுக்கு பிறகு எலும்புக் கூடாக தொங்கிய அவலம்!!

 
ஞானசௌந்தர்யா

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட எஸ். அம்மாபாளையம் அடுத்த முள்ளிகாடு பகுதியில் பெருமாள் என்பவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவருடைய மகள் ஞானசௌந்தர்யா கோவையில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு 11ம் வகுப்பு படித்து வந்தார். அங்கு பொதுதேர்வு முடிந்து சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். ஆனால் ஊரில் திருவிழா நடைபெறும் போதே ஞானசௌந்தர்யா காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஞானசௌந்தர்யா

பின்பு காவல்துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து கோவை, திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கு தேடி பார்த்தனர். ஆனால், மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. 

பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர், எஸ் அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த பகுதிக்கு உறவினர்கள், போலீசார் சென்று பார்த்தனர். அப்போது அது ஞானசௌந்தர்யா தான் என்று கதறிஅழுதவாறு பெற்றோர் கூறினர். 

அங்கு மருத்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடுகளை மற்றும் அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவர்களை சேகரித்து டிஎன்ஏ டெஸ்ட் மற்றும் உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெறும் எலும்பு கிடைத்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஞானசௌந்தர்யா

அப்போது கோவிந்தராஜ், மோகன்ராஜ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இப்போது மூன்றாவதாக வெங்கடேசன் என்பவரும் இதில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்ககோரி மாணவியின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதேநேரம் 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web