18 வயதில் நர்சிங் மாணவி மர்ம மரணம்... போலீசார் விசாரணை!

 
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நர்சிங் மாணவி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

 

குமரி மாவட்டம், அருமனை அருகே பிலாக்காடு, சூட்டூர்கோ ணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ராஷிகா (18). இவர் தலக்குளம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கியிருந்தபடி படித்து வந்தார். 

 

இந்நிலையில் ராஷிகாவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தலைவலி ஏற்பட்டு வாந்தியும் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொ டர்ந்து ராஷிகா தனது வீட்டுக்கு சென்று, தனது பெற்றோரிடம் உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். 

இதையடுத்து ராஷிகாவை பெற்றோர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ராஷிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு நோய்கள் எதுவும் இல்லை என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

மறுவீட்டுக்கு சென்ற புது மாப்பிள்ளை மர்ம மரணம்!! அதிர வைக்கும் திருப்பங்கள்!!

இந்நிலையில் வழக்கம்போல் இரவு சாப்பாடு முடிந்து ராஷிகா தூங்கி உள்ளார். இந்நிலையில் அடுத்த நாள் காலையில் ராஷிகா உடலில் எந்த அசைவும் இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்தார். 

உடனடியாக அவரை பெற்றோர்கள் மீட்டு குலசேகரம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஷிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு ராஷிகாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நர்சிங் கல்லூரி மாணவி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?