விமான நிலையத்தில் மர்ம ட்ரோன் பறப்பு… விமான சேவை முடக்கம்!
ஜெர்மனியின் ஹானோவர் விமான நிலையம் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததால் மீண்டும் விமான சேவை பாதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 9.47 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 12.16 மணி வரை பாதுகாப்பு காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

விமான நிலையத்தின் மேல் ஐந்து ட்ரோன்கள் பறந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சில விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானனர்.

சமீப காலமாக ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பாவின் பல நாடுகளில் விமான நிலையங்கள் மீது மர்ம ட்ரோன்கள் பறப்பது தொடர்கதையாகியுள்ளது. இதனால் விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கடும் கவலை எழுந்துள்ளது. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
