சென்னையில் தொழிலதிபரை கடத்திய மர்ம கும்பல்... நெல்லூரில் 6 பேர் கைது
தெலங்கானாவைச் சேர்ந்த பழைய சொகுசு கார் வியாபாரி ரவீந்திர கவுடா, கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் சென்னைக்கு வந்து மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்று மதியம் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியில் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்தவர்கள் வெள்ளை காரில் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி சென்றனர்.

தந்தை காணாமல் போனதை அறிந்த மகள் பிரசன்ன லக்ஷ்மி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில், கடத்தல் நடந்தது தெரிய வந்தது. உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கடத்தலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் அடையாளம் கண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் பதுங்கியிருந்த மோதி பாபு தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
