மாயமான சிறுமி.. விசாரணையில் பகீர் பின்னணி.. கல்லூரி மாணவன் சுற்றி வளைப்பு!

 
ஆகாஷ்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள் சென்னை அரசு கல்லூரியில் பி.ஏ. இலக்கியம் படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முத்தபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். சிறுமியின் செல்போன் டவர் சிக்னலை சோதனை செய்தபோது, மரக்காணம் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். 

ஆகாஷ்

விசாரணையில், சென்னையில் கல்லூரியில் படித்து வந்த, மரக்காணத்தை சேர்ந்த ஆகாஷ் (21) என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சொந்த ஊருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

ஆகாஷ்

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த  ஆகாஷ் தலைமறைவானார். இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டிற்கு வந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை வைத்து மரக்காணம் பகுதியில் வைத்து ஆவடி போலீசார், ஆகாஷை கைது செய்தனர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web