மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள் - பேட்டரி லைட் உள்ளிட்ட உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில், கனமான மர்மப் பொருட்கள் சிக்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பொருட்களில் பேட்டரி லைட் உள்ளிட்ட உதிரி பாகங்கள் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்கன்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் ஈஸ்வரன் நேற்று முன்தினம் (டிசம்பர் 7) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். கடலில் வலையை வீசி சிறிது நேரம் கழித்து இழுத்தபோது, வலை கனமாக இருந்துள்ளது. பெரிய மீன் சிக்கியதாகக் கருதி அவர் வலையைக் கரைக்குக் கொண்டு வந்து பார்த்துள்ளார். அப்போது வலையில் மீனுக்குப் பதிலாக, பேட்டரி லைட் உட்படப் பல்வேறு உதிரி பாகங்கள் அடங்கிய மர்மப் பொருட்கள் சிக்கியதைக் கண்டு மீனவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் திருப்பாலைவனம் போலீசாருக்கு மீனவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து திருப்பாலைவனம் போலீசார் அந்த மர்மப் பொருட்களை மீட்டுச் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
