பகீர்... பள்ளி மாணவனை கத்தியாயால் தாக்கிய மர்மநபர்கள்!

 
பள்ளி மாணவன்

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு அருணாச்சலப்புரத்தில் வசித்து வருபவர்  முனியப்பன் இவர்  ஹோட்டல் நடத்தி வருகிறார் இவருடைய மகன் 11 வயது முனீஸ்வரன்  அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்  னீஸ்வரன் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தான்.  

ச்

வடக்கு தெரு பகுதியில் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு இளைஞர்கள் முனீஸ்வரன் கழுத்தை நோக்கி கத்தியை வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக முனீஸ்வரன்  சற்று விலகியதால் கழுத்தில் கத்தி ஆழமாக பாயவில்லை.  நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற பள்ளி மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
 ஆம்புலன்ஸ்
இச்சம்பவம் குறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  முதல் கட்ட  விசாரணையில் முனீஸ்வரன் சொத்து  பிரச்சனை காரணமாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில்  இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது