நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அடிதடி , மோதல்!! சென்னையில் பரபரப்பு!!

 
நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டப்பட்டது. அதாவது, விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என்று கூறியிருந்தார். அதாவர்கள் தமிழர்கள் இல்லை என்ற வகையில் பேசியதாக பல்வேறு அமைப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். 

சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்தது. அருந்ததியர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் உள்ளிட்ட அருந்ததியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உருவப்பொம்மையை எரித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி

அந்த வகையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இரு நாம் தமிழர்- ஆதித்தமிழர் கட்சியினர் ஒரே நேரத்தில் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் உண்டானது.

ஆத்திரமடைந்த ஆதித்தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது கற்கள், பாட்டில்களை வீசியதால் பரபரப்பு உண்டானது. இதுபோலவே நாம் தமிழர் கட்சியினருக்கும் பதிலுக்கு ஆதி தமிழர் கட்சியினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சியளித்தது. 

நாம் தமிழர் கட்சி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 
 

From around the web