நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை துரைமுருகனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை... சீமான் பளிச்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சாட்டை முருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வரும் கருத்துகள் அவருடைய சொந்த கருத்துகள் என்றும் அதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”சாட்டை துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ (YouTube Channel) தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும், அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சாட்டை துரைமுருகனின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைகளின் விளைவாக வெளியிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த அறிக்கையின் பின்னணி காரணங்கள் குறித்த விளக்கங்கள் பற்றி தெளிவாக தெரியவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!