‘நாம் தமிழர்’ கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்... அதிர்ச்சியில் சீமான்!

 
நாதக
 


தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தவர் சீமான். விஜய் கட்சி ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டதுமே தமிழக அரசியலில் சீமானும், விஜய்யும் கூட்டணியாக போட்டியிடுவார்கள்.. பெரிய மாற்றம் வரும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

நாதக

ஆனால் திரைப்படங்களை விட அதிக விறுவிறுப்புகளும், திருப்பங்களுமாக நடிகர் விஜய் மாற்றத்தைத் தருவார், தனது தம்பி என்று சொல்லி வந்த சீமான், மாநாட்டிற்கு பின் விஜய் கொள்கைகளில் உடன்பாடு கிடையாது என்றார். அதே சமயம் கூட்டணியும் கிடையாது.. தனித்தே போட்டி என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், அடுத்தடுத்து ‘நாம் தமிழர்’ கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் விலகி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மேலும் ஒரு நிர்வாகி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நடவடிக்கை மீது சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்து, விலகி வருகின்றனர்.தற்போது நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!