டிசம்பர் 27ல் நாம் தமிழர் பொதுக்குழுக் கூட்டம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழுக் குழு உறுப்பினர்கள் அனைவரும், தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 27-ல் சென்னையில் நடைபெறுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தப் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
