நாற்பது ரூபாய்க்குள் நச்சுனு ஒரு ஷேர்... போனஸ் பங்கை அறிவித்தது! உங்ககிட்ட இருக்கா?

 
இரும்பு தொழிற்சாலை

இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 0.04 சதவீதம் அதிகரித்து 57,655.06 ஆக உள்ளது. பிஎஸ்இ மிட்-கேப் குறியீடு முறையே 0.36 சதவீதம் மற்றும் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 0.27 சதவீதம் சரிந்தது. இருப்பினும் SRU ஸ்டீல்ஸின் பங்குகள் 2.59 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூபாய் 31.25 ஆக இருந்தது, அதன் முந்தைய முடிவு விலையான ரூபாய்.32.07 ஆக இருந்து குறைந்தது, அதிகபட்சம் ரூபாய் 33 ஆகவும், நாளின் குறைந்தபட்சம் ரூபாய் 30.65 ஆகவும் இருந்தது. 

அலுவலகம் கட்டிடம்

பங்கு ஒன்றுக்கு ரூபாய் 33 என்ற புதிய 52 வார உச்சத்தில் வர்த்தகம் ஆனது. ஏப்ரல் 21, 2023 அன்று, "சுஷில் கோயல்" 84,100 பங்குகளை ஒரு பங்குக்கு ரூபாய் 31 வீதம் மொத்தமாக வாங்கி  ரூபாய் 26 கோடியாக தன்னுடைய முதலை கொண்டு வந்தார். இந்த ஸ்மால்-கேப் நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு 1:2 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை பதிவு தேதியின்படி அறிவித்ததால், சமீபத்திய வர்த்தகப் பங்குகளில் இந்த பங்கு மீண்டும் மீண்டும் அப்பர் சர்க்யூட்டை தாக்கியுள்ளது. போனஸ் பங்கிற்கான பதிவுத் தேதியை நிறுவனம் புதன்கிழமை, மே 03, 2023 என உறுதிப்படுத்தியது.

தொழிற்சாலை கம்பி கட்டிடம்

SRU ஸ்டீல்ஸ் லிமிடெட் எஃகு மற்றும் இரும்பு பொருட்களின் வர்த்தகம் மற்றும் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளது. நிறுவனம் பல்வேறு வகையான எஃகு தயாரிப்புகளில் வர்த்தகம் செய்வதிலும், உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுத் திட்டங்களுக்கான எஃகு தயாரிப்புகளை விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனத்தின் நிதிநிலை காலாண்டு முடிவுகள் மற்றும் ஆண்டு முடிவுகளில் சிறப்பாக இருந்தது. Q3FY23ல், நிகர விற்பனை 13 சதவீதம் உயர்ந்தது மற்றும் Q3FY22 உடன் ஒப்பிடும்போது நிகர லாபம் 900 சதவிகிதம் உயர்ந்தது. கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில், பங்கு 18 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. பங்கு ஒன்றுக்கு அதன் 52 வாரக் குறைந்த ரூபாய் 14.85 லிருந்து 122.22 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை  முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. இந்த நிறுவனப் பங்கு உங்களிடம் இருந்தால் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பலனிக்கும்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web