பாஜக மாநாட்டில் 'காலி சேர்கள்' - நயினார் நாகேந்திரன் வராததால் தொண்டர்கள் அப்செட்?!

 
பாஜக காலி சேர்கள் சேர்

பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் மாநில அளவிலான மாநாடு நெல்லையில் நேற்று பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கள நிலவரம் முற்றிலும் மாறாக அமைந்தது. இந்த மாநாட்டிற்குச் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு, அதற்கேற்ப 2,000 இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.

பாஜக

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சொந்த தொகுதியான நெல்லையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அவசரப் பணி நிமித்தமாக நேற்று காலை ரயில் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார். நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் வராததால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. இதன் விளைவாக, மேடையில் சில நிர்வாகிகள் மட்டுமே அமர்ந்திருக்க, கீழே போடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான இருக்கைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நயினார் நாகேந்திரன்

மாநில சிறுபான்மையினர் அணித் தலைவர் கோவை ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலத் தலைவரின் சொந்த ஊரிலேயே நடைபெற்ற ஒரு மாநில மாநாட்டிற்கு நிர்வாகிகள் வராமல் போனது, அக்கட்சியினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததைக் காட்டுகிறது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் தொண்டர்களின் வருகை குறைவாக இருப்பது பாஜக தலைமைக்குச் சவாலாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!