நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல்!

 
நயினார் நாகேந்திரன்
 தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுக்கவும், நியமிப்பது தொடர்பாக கலந்து ஆலோசிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை தந்துள்ளார். அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் விருப்ப மனு அளித்துள்ளார். பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் தனது விருப்பமனுவை அளித்தார். தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பெயரை அண்ணாமலை, எல்.முருகன், வானதி உட்பட  10 பேர் பரிந்துரை செய்தனர். 

பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே இதுவரை விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பாஜக தலைவருக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வாகிறார். நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நயினார் நாகேந்திரன்
ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரன், 2001 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 10 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் 2011 தேர்தலில் மீண்டும் சட்டமன்றஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்,  2001-2006 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார்.  

அமித்ஷா

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் முக்கியத்துவம் இல்லையென நயினார் அதிருப்தியில் இருந்தார். பின்னர் திடீரென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்து மாநில துணை தலைவரானார்  .  2019ம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாரளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2021 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web