பதவியேற்ற முதல் நாளிலேயே கெத்து காட்டிய நயினார் நாகேந்திரன் ... ஹிந்தி வேண்டாம்… தாய்மொழியில் பேசுங்க… !

தமிழக பாஜக கட்சியின் தலைவர் பதவி ஏற்பு விழா சென்னை கமலாயத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனனும் கலந்து கொண்டார்.
இவர் நிகழ்ச்சியில் ஹிந்தியில் பேசிய நிலையில் அவரை நயினார் நாகேந்திரன் தாய் மொழியில் பேசுமாறு கூறினார். இது குறித்து அவர் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கேரளாவில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி மலையாளமாக இருந்த போதிலும் அவர் ஹிந்தியில் தான் பேசினார்.
இவர் மலையாளத்தில் பேசி இருந்தால் இன்னும் கூட தெளிவாக அனைவருக்கும் புரிந்திருக்கும். எனவே இனி அடுத்து வரும் போது உங்கள் தாய் மொழியான மலையாளத்தில் பேசுங்கள் எனக் கூறினார். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்தியை திணிக்க பார்ப்பதாக சாட்டி வருகிறார்கள். ஹிந்தி மொழிக்கு பாஜக ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஹிந்தியில் பேச வேண்டாம் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள் என நயினார் நாகேந்திரன் சொன்னது பேசும் பொருளாக மாறியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!